×

பூந்தமல்லி முதல் கத்திப்பாரா வரை 443 கண்காணிப்பு கேமராக்கள்

சென்னை: பூந்தமல்லி குமணன் சாவடியில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை அமைக்கப்பட்டுள்ள 443 கண்காணிப்பு கேமராக்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் தொடங்கி வைத்தார்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசாரின் அறிவுறுத்தலின்படி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் மவுண்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குமணன்சாவடி சந்திப்பில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை போக்குவரத்து காவல் துறை சார்பில் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொருத்தப்பட்டுள்ள 443 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பூந்தமல்லி பஸ் நிலையம் முன்பு கட்டப்பட்ட புறக்காவல் நிலையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும் கண்காணிப்பு கேமரா அமைக்க உறுதுணையாக இருந்த  நகர் நல சங்கம், வியாபாரி சங்க நிர்வாகிகளை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் நஜ்முல் ஹோடா, உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Poonamalle ,Kathipara , Poonamalli, Kathirpara flyover, surveillance cameras
× RELATED கிண்டியில் பெண் தவறவிட்ட 40 சவரன், ரூ.61...